Google

வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியில் சாதனைகள் தொடர்கின்றன…

Written on:February 13, 2013
Comments are closed

IMG_7149தற்போது நடைபெற்று வரும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியில் 18 வயதுக்குட்பட்ட ஈட்டியெறிதல் நிகழ்வில் நாகலிங்கம் இல்லத்தை சேர்ந்த டிலக்சன் 38.39 M தூரம் எறிந்து புதிய சாதனையை நிலைநாட்டினார்.
இதற்கு முன் 2012 ஆம் ஆண்டில் நாகலிங்கம் இல்லத்தை சேர்ந்த வித்தியாசங்கரினால் 36.74 M தூரம் எறிந்தமையே இதுவரையும் சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று  19 வயதுக்குட்பட்ட உயரம் பாய்தல் நிகழ்வில் சபாபதி இல்லத்தை சேர்ந்த தனுசன் 1.88 M உயரம் பாய்ந்து புதிய சாதனையை நிலைநாட்டினார்.
இதற்கு முன் 2004 ஆம் ஆண்டில் செல்லத்துரை இல்லத்தை சேர்ந்த தீனதக்சன் என்பவரால் 1.73 M உயரம் பாய்ந்தமையே இதுவரையும் சாதனையாக இருந்தது.

16 வயதுக்குட்பட்ட ஈட்டியெறிதல் நிகழ்வில் நாகலிங்கம் இல்லத்தை சேர்ந்த கோகுலன் 38.32 M தூரம் எறிந்து புதிய சாதனையை நிலைநாட்டினார்.
இதற்கு முன் 1974 ஆம் ஆண்டில் பசுபதி இல்லத்தை சேர்ந்த சண்.தயாளன் என்பவரால் 38.06 M தூரம் எறிந்தமையே இதுவரையும் சாதனையாக இருந்தது.

அடுத்து 18 வயதுக்குட்பட்ட நீளம் பாய்தல் நிகழ்வில் சபாபதி இல்லத்தை சேர்ந்த விஜிந்தன் 5.96 M தூரம் பாய்ந்து புதிய சாதனையை நிலைநாட்டினார்.
இதற்கு முன் 2011 ஆம் ஆண்டில் பசுபதி இல்லத்தை சேர்ந்த ஜஸ்மினன் என்பவரால் 5.96 M தூரம் பாய்ந்தமையே இதுவரையும் சாதனையாக இருந்தது.

14 வயதுக்குட்பட்ட 4*400 M அஞ்சல் ஓட்ட நிகழ்வில் நாகலிங்கம் இல்லம் 05:04:15 எனும் நேரத்தில் ஓடி புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளது. இதற்கு முன் 2001 ஆம் ஆண்டில் செல்லத்துரை இல்லம் 05:09:03 எனும் நேரத்தில் ஓடியமையே சாதனையாக இருந்தது.

Sorry, the comment form is closed at this time.