Google

வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியில் 13 வயதுப் பிரிவு உயரம், 17 வயதுப் பிரிவு தட்டெறிதலில் புதிய சாதனைகள்…

Written on:February 12, 2013
Comments are closed

IMG_7067தற்போது நடைபெற்று வரும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியில் 17 வயதுக்குட்பட்ட தட்டெறிதல் நிகழ்வில் செல்லத்துரை இல்லத்தை சேர்ந்த விதுசன் 39.14 M தூரம் எறிந்து புதிய சாதனையை நிலைநாட்டினார்.
இதற்கு முன் 1979 ஆம் ஆண்டில் காசிப்பிள்ளை இல்லத்தை சேர்ந்த அ.தயாபரன் என்பவரால் 36.87 M தூரம் எறிந்தமையே இதுவரையும் சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
556085_463940840325745_538103768_n

இதே போன்று 13 வயதுக்குட்பட்ட உயரம் பாய்தல் நிகழ்வில் சபாபதி இல்லத்தை சேர்ந்த டிலக்சன் 1.28 M உயரம் பாய்ந்து புதிய சாதனையை நிலைநாட்டினார்.
இதற்கு முன் 1994 ஆம் ஆண்டில் பசுபதி இல்லத்தை சேர்ந்த இ.கோபிதரன், 2009 ஆம் ஆண்டில் செல்லத்துரை இல்லத்தை சேர்ந்த இ.செந்தூரன், 2012 ஆம் ஆண்டில் செல்லத்துரை இல்லத்தை சேர்ந்த தர்சிகன் என்பவர்களால் 1.26 M உயரம் பாய்ந்தமையே இதுவரையும் சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

IMG_7067

Sorry, the comment form is closed at this time.