Google

யாழ்ப்பாணக் கல்லூரியை வெற்றி கொண்டது யாழ் இந்து 19 வயதுப் பிரிவு கிரிக்கட் அணி…

Written on:February 10, 2013
Comments are closed

DSC_0489-copyஅண்மையில் நடைபெற்ற 19 வயதுப் பிரிவிற்குரிய  கிரிக்கட் சுற்றுப் போட்டியின் நான்காம் போட்டி யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் யாழ் இந்துக் கல்லூரி அணி  யாழ்ப்பாணக் கல்லூரி அணியை எதிர்த்து
விளையாடியது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற  யாழ்ப்பாணக் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதனடிப்படையில் முதலாவது இனிங்ஸில் யாழ்ப்பாணக் கல்லூரி 27.3 பந்துப்பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 154 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் யாழ்ப்பாணக் கல்லூரி  சார்பில் :
அபிராஜ் – 33
மதுசன் – 32 ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில் யாழ் இந்துக் கல்லூரி சார்பில் :
பானுகோபன் – 3
மதுசன் -2 விக்கெட்டுக்களை பெற்றனர்.

பின் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ் இந்துக் கல்லூரி  40.5 பந்துப்பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில்  யாழ் இந்துக் கல்லூரி சார்பில் :
றுக்ஸ்மன் – 65 (1 six, 7 fours)
சிந்துஜன் -21 ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில்  யாழ்ப்பாணக் கல்லூரி சார்பில் :
நிமலேந்திரன் – 5
சோபிநாத் – 3 விக்கெட்டுக்களை பெற்றனர்.

இதனை தொடர்ந்து இடம்பெற்ற இரண்டாவது இனிங்ஸில் யாழ்ப்பாணக் கல்லூரி 33.3 பந்துப்பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 88 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில்  யாழ்ப்பாணக் கல்லூரி சார்பில் :
நிமலேந்திரன் -18
அபிராஜ் – 15 ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில் யாழ் இந்துக் கல்லூரி சார்பில் :
பானுகோபன் – 5
கல்கோகன் -2 விக்கெட்டுக்களை பெற்றனர்.

பின் 108 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த யாழ் இந்துக் கல்லூரி அணி 16 பந்துப்பரிமாற்றங்களில் 2 இலக்குகளை மாத்திரம் இழந்து 108 ஓட்டங்களை பெற்று இப் போட்டியில் வெற்றி பெற்றது.

துடுப்பாட்டத்தில்  யாழ் இந்துக் கல்லூரி சார்பில் :
மதுசன் – 59* (1 six, 9 fours) (44 balls)
கல்கோகன் -25 ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில்  யாழ்ப்பாணக் கல்லூரி சார்பில் :
பிரவிந் – 1
நிலுக்சன் – 1 விக்கெட்டை பெற்றனர்.

Sorry, the comment form is closed at this time.