Google

இல்ல மெய்வல்லுநர் போட்டியினை முன்னிட்டு நடாத்தப்பட்ட கூடைப்பந்தாட்ட போட்டிகளின் முடிவுகள்…

Written on:February 8, 2013
Comments are closed

IMG_6957இன்றைய தினம் (08.02.2013 – வெள்ளிக்கிழமை) யாழ் இந்துக் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட திடலில் இல்ல மெய்வல்லுநர் போட்டியின் ஒரு நிகழ்வான கூடைப்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. முதலில் 15 வயதுப் பிரிவிற்குரிய இறுதிப் போட்டி நடைபெற்றது. இப் போட்டியில் பசுபதி இல்லத்தை எதிர்த்து சபாபதி இல்லம் விளையாடியது. இதனடிப்படையில் 27 :23 என்ற புள்ளிகளின் அடிப்படையில் பசுபதி இல்லம் சபாபதி இல்லத்தை தோற்கடித்து முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டது.

இதன் பின்னர் மாலை 6.30 மணியளவில் மின்னொளியில் நடைபெற்ற 19 வயதுப் பிரிவிற்குரிய மற்றுமொரு இறுதியாட்டத்தில் நாகலிங்கம் இல்லத்தை எதிர்த்து செல்லத்துரை இல்லம் விளையாடியது. இப் போட்டியில் நாகலிங்க இல்லம் 57:40 எனும் புள்ளிகளடிப்படையில் செல்லத்துரை இல்லத்தை தோற்கடித்து முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டது.

IMG_6925 IMG_6927 IMG_6930 IMG_6931 IMG_6932 IMG_6933 IMG_6936 IMG_6942 IMG_6945 IMG_6950 IMG_6951 IMG_6954 IMG_6955 IMG_6956 IMG_6957 IMG_6960 IMG_6965 IMG_6972 IMG_6981 IMG_6982 IMG_6988 IMG_6989 IMG_6995 IMG_6997 IMG_7009 IMG_7011 IMG_7013 IMG_7017 IMG_7019 IMG_7020 IMG_7021 IMG_7022 IMG_7023 IMG_7024

Sorry, the comment form is closed at this time.