Google

இரண்டாம் சுற்றில் யாழ் இந்துவின் 13 வயதுப் பிரிவு கிரிக்கட் அணி பொலநறுவை கதுள்ள மகா வித்தியாலய அணியை 258 ஓட்டங்களால் வெற்றி கொண்டது.

Written on:February 4, 2013
Comments are closed

IMG_5653அண்மையில்  (01/02/2013) நடைபெற்ற 13 வயதுப் பிரிவிற்குரிய  கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இரண்டாம் சுற்றில்  யாழ் இந்துக் கல்லூரி அணி பொலநறுவை கதுள்ள மகா வித்தியாலய அணியை எதிர்த்து விளையாடியது. இப் போட்டி அண்மையில்  பொலநறுவையில் இடம்பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பொலநறுவை கதுள்ள மகா வித்தியாலய அணி முதலில் களத்தடுப்பை செய்ய தீர்மானித்தது.
இதனடிப்படையில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய யாழ் இந்துக் கல்லூரி 50 பந்துப் பரிமாற்றங்களில் 6 இலக்குகளை இழந்து 337 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் யாழ்  இந்துக் கல்லூரி  சார்பில் :
கோபிராம் – 62*
சர்மிலன் – 55
யனுசன் -45 ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில் பொலநறுவை கதுள்ள மகா வித்தியாலய அணி சார்பில் :

கேரத் – 4
செனவிரட்ன – 2 இலக்குகளை பெற்றனர்.

பின் 338 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பொலநறுவை கதுள்ள மகா வித்தியாலய அணி 18.5 பந்துப் பரிமாற்றங்களில்அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 79 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் பொலநறுவை கதுள்ள மகா வித்தியாலய அணி சார்பில் :

லக்மல் – 11
பிரபகாஸ்வர – 10 ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில் யாழ் இந்துக் கல்லூரி அணி சார்பில் :

சங்கீதன் – 3
யனுசன் -1
கஜானன் -1 இலக்குகளை பெற்றனர்.

இதனால் யாழ் இந்துக் கல்லூரி அணி 258 எனும் ஓட்ட வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

Sorry, the comment form is closed at this time.