Google

யாழ் இந்துவின் மெய்வல்லுநர் போட்டியின் முதல் நிகழ்வான 33ஆவது வீதியோட்டம்- 2013

Written on:January 30, 2013
Comments are closed

இன்றைய தினம் (30-01-2013) காலை 6.00 மணியளவில் யாழ் இந்துக் கல்லூரியின் 2013 ஆம் ஆண்டுக்குரிய இல்ல மெய்வல்லுநர் போட்டியின் முதல் நிகழ்வான 33ஆவது வீதியோட்டம் (5km) நடைபெற்றது. இந்நிகழ்வு இளநிலைப் பிரிவு, முதுநிலைப் பிரிவு எனும் இரு கட்டங்களாக நடைபெற்றன.  இப் போட்டிக்கு இரு பிரிவுகளிலிருந்தும் ஏறத்தாள 830 மாணவர்கள் பங்குபற்ற இருந்தார்கள். இப் போட்டிகளை யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் Mr.சண்.தயாளன் அவர்கள் கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.
இப் போட்டியில் இளநிலைப் பிரிவில் செல்லத்துரை இல்லம் முதலாம் இடத்தையும், சபாபதி இல்லம் இரண்டாம் இடத்தையும், பசுபதி இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது. இதே போன்று முதுநிலைப் பிரிவில் நாகலிங்கம் இல்லம் முதலாம் இடத்தையும், பசுபதி இல்லம் இரண்டாம் இடத்தையும், சபாபதி இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.








Sorry, the comment form is closed at this time.