Google

ஸ்கந்தவரோதயா கல்லூரியை வெற்றி கொண்டது யாழ் இந்து 19 வயதுப் பிரிவு கிரிக்கட் அணி…

Written on:January 29, 2013
Comments are closed

அண்மையில் நடைபெற்ற 19 வயதுப் பிரிவிற்குரிய  கிரிக்கட் சுற்றுப் போட்டியின் மூன்றாம் போட்டி யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் யாழ் இந்துக் கல்லூரி அணி ஸ்கந்தவரோதயா கல்லூரி அணியை எதிர்த்து
விளையாடியது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கந்தவரோதயா கல்லூரி அணி முதலில் களத்தடுப்பை செய்ய தீர்மானித்தது.
இதனடிப்படையில் முதலாவது இனிங்ஸில் யாழ் இந்துக் கல்லூரி 36 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 137 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில்யாழ் இந்துக் கல்லூரி  சார்பில் :
சஜீகன் – 60 (11 fours)
மதுசன் – 13 ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில் ஸ்கந்தவரோதயா கல்லூரி சார்பில் :
ஜனக்ஸன் – 4
சிந்துஜன் -3 விக்கெட்டுக்களை பெற்றனர்.

பின் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தவரோதயா கல்லூரி 45 ஒவர்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 151 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் ஸ்கந்தவரோதயா கல்லூரி சார்பில் :
றொபேட் – 48
கனுஜன் -21 ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில் யாழ் இந்துக் கல்லூரி சார்பில் :
மதுசன் – 3
சிந்துஜன் – 3 விக்கெட்டுக்களை பெற்றனர்.

இதனை தொடர்ந்து இடம்பெற்ற இரண்டாவது இனிங்ஸில் யாழ் இந்துக் கல்லூரி 40.4 ஓவர்களில் 6 இலக்குகளை மாத்திரம் இழந்து 291 ஓட்டங்களை பெற்றுக் கொண்டு தனது துடுப்பாட்டத்தை நிறுத்திக் கொண்டது.

துடுப்பாட்டத்தில்  யாழ் இந்துக் கல்லூரி  சார்பில் :
கல்கோகன் – 101* (72 balls) (5 sixes,9 fours)
றுக்ஸ்மன் – 61 (42 balls) (1 six, 9 fours)
குகானன் – 41

பந்து வீச்சில் ஸ்கந்தவரோதயா கல்லூரி சார்பில் :
நிரோஜன் – 3 விக்கெட்டுக்களை பெற்றார்.

பின் 277 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த ஸ்கந்தவரோதயா கல்லூரி அணி 50.3 ஓவர்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 178 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் ஸ்கந்தவரோதயா கல்லூரி சார்பில் :
நிரோஜன் – 51
ஜனக்ஸன் -28 ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில் யாழ் இந்துக் கல்லூரி சார்பில் :
சிந்துஜன் – 3
சாரங்கன் – 2
மதுசன் -2
பானுகோபன் -2 விக்கெட்டுக்களை பெற்றனர்.

இப் போட்டியில் கல்கோகனுக்கும் றுக்ஸ்மனுக்கும் இடையில் இணைப்பாட்டமாக 160 ஓட்டங்கள் பகிரப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் நடைபெற்ற யாழ் மத்திய கல்லூரியுடனான போட்டி சமனிலையில் நிறைவடைந்திருந்தது. அதே போன்று யாழ் கனகரட்ணம் மகா வித்தியாலயத்துடன் நடைபெற்ற போட்டியில் அக் கல்லூரியை யாழ் இந்துக் கல்லூரி வெற்றி கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Sorry, the comment form is closed at this time.