Google

யாழ் இந்துவில் தரம் 6 மாணவர்களுக்கான கால்கோள் விழா – 2013

Written on:January 20, 2013
Comments are closed

18/01/2013 அன்று யாழ் இந்துக் கல்லூரியில் தரம் 6 மாணவர்களுக்கான கால்கோள் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பல கல்வியியளாலர்களும், பழைய மாணவர்களும், எமது கல்லூரி ஆசிரியர்களும்,  தரம் 6 மாணவர்கள் தமது பெற்றோர் சகிதமும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு.அருணகிரிநாதன் (Deputy Director of Education, Jaffna) அவர்கள் கலந்து கொண்டார்.

 

இந் நிகழ்வின் முதன் நிகழ்வாக சிவஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது. இதன் பின்னர் பிரதம விருந்தினர்களுக்கு மாலைகள் அணிவித்து பான்ட் வாத்தியங்களுடன் ஊர்வலமாக தரம் 6 மாணவர்களும் கே.கே.எஸ் வீதி வழியாக எமது கல்லூரியின் முன் வாயிலூடாக பிரார்த்தனை மண்டபத்தினுள் வரவேற்கப்பட்டனர். இதன் பின் பிரார்த்தனை மண்டபத்தில் விசேட பூசையும் இடம்பெற்றது. அதன் பின் சிவஞான வைரவப் பெருமான் ஆலய  பூசகரினால் ஆசியுரையும், அதிபர் அவர்களது உரையும் அதனைத் தொடர்ந்து பலரது வாழ்த்துரைகளும் இடம்பெற்றன. இந் நிகழ்வின் போது யாழ் இந்துவின் ”இளசுகள்” அணியால் தரம் 6 மாணவர்களை வரவேற்று பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டது.

இதன் பிற்பாடு யாழ் மக்கள் வங்கி கிளையினரால் அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்களும், தொப்பிகளும் வழங்கப்பட்டன. பின்னர் மாணவர்கள் அனைவரும் தமது புதிய வகுப்பறைகளுக்கு சென்று கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதன் பின் மாணவர்கள் அனைவருக்கும் மதிய உணவும், பாலும் வழங்கப்பட்டதுடன் அன்றைய நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவுபெற்றது.








Sorry, the comment form is closed at this time.